வெள்ளி, 29 ஏப்ரல், 2011

சீனப் பழமொழிகள் #1 - ஒன்று கேட்டு மூன்று பெறுதல்

பழமொழி உருவான கதை

சென்-காங், கொங்-லி (கன்ஃபூசியசின் மகன்) யிடம், "ஆசிரியர் உனக்கு தனிப்பட்ட அறிவுரை அளித்திருக்கிறாரா?" என்று கேட்டான்.

"இல்லை! ஒரு நாள் முற்றத்தில் தனியாக நின்று கொண்டிருந்தார். நான் அந்த வழியாக போகும் போது என்னை அழைத்து, <பாடல் நூல்> கற்றிருக்கிறேனா என்று கேட்டார்.
நான் இல்லை என்று சொன்னதும், 'பேச்சு சிறப்பாக வராது' என்றார். அதன் பிறகு நான் <பாடல் நூல்> கற்க ஆரம்பித்தேன்.

இன்னொரு நாள், மாணவர்கள் யாரும் அருகில் இல்லாமல் தந்தை முற்றத்தில் நின்று கொண்டிருந்த போது அந்த வழியாக போனேன். '<வழக்கு நூல்> கற்றிருக்கிறேனா என்று கேட்டார். அப்போதும் எனது பதில் இல்லைதான். 'நடத்தை சிறப்பாக இருக்காது' என்றார். அதன் பிறகு நான் <வழக்கு நூல்> கற்க ஆரம்பித்தேன்.

இந்த இரண்டுதான் நான் தந்தையிடமிருந்து தனியாகக் கேட்டு அறிந்தது" என்றான் கொங்-லி.

சென்-காங் திருப்தியுடன் சென்றான். "ஒன்று கேட்டு மூன்று பெற்றேன். <பாடல் நூல்> கற்க வேண்டும், <நடத்தை நூல்> கற்க வேண்டும், கன்ஃபூசியஸ் போன்ற சான்றோர் தம் மகனுக்கு மட்டும் என்று சலுகை அளிப்பதில்லை".

1 கருத்து: